Superstar Rajinikanth and filmmaker Rakesh Roshan go a long way. Their association was cemented with the 1986 film "Bhagwaan Dada" that was directed by Hrithik Roshan's maternal grandfather J Om Prakash and produced by Rakesh Roshan . It was a film in which Hrithik, who was 12 then, had his first speaking part.
Over the last three decades Rakesh and Rajini have stayed in touch. As has been a practice for the last 30 odd-years, this year too the Bollywood filmmaker called the Tamil superstar to wish him on his birthday(December 12). Rajini thanked him for his good wishes. In turn, he also paid Hrithik a compliment. Said he, ``I have watched the Tamil ,Hindi and Telugu trailers of Kaabil and I simply loved it. I also think Hrithik is stupendous. Please tell him that I am eagerly awaiting the film.'' Kaabil is titled Balam in Telugu and Tamil . Rajinikanth also praised Rajesh Roshan for the music after having watched Kaabil Hoon and Haseeno ka Deewana songs.
Rakesh Roshan was overwhelmed with the compliment, as was Hrithik when he heard that the praise had come from the man himself. The second trailer of the film in which Hrithik teams up with Yami Gautam is out now. Kaabil is an incredible love story with immense emotion and mind boggling action in which Hrithik Roshan and his love interest Yami Gautam are playing a visually impaired (blind) couple.
Kaabil is directed by Sanjay Gupta and will release on Jan 25th 2017.
1986 ஆம் ஆண்டு வெளியான 'பாக்வான் தாதா' திரைப்படத்தில் தொடங்கிய நட்பு, இன்று வரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பழம்பெரும் இயக்குநர் ராகேஷ் ரோஷன் இடையே நல்லுறவோடு நீடித்து வருகிறது...இந்த படம் ஹ்ரித்திக் ரோஷனின் தாய் வழி தாத்தா ஜே ஓம் பிரகாஷ் இயக்கத்திலும், ராகேஷ் ரோஷனின் தயாரிப்பாலும் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது....அதுமட்டுமின்றி, இந்த படத்தில் தான் ஹ்ரித்திக் ரோஷன் முதல் முறையாக திரையில் குரல் கொடுத்தார்..அப்போது அவருக்கு வயது 12.
ஏறக்குறைய 30 ஆண்டு காலமாக ராகேஷ் - ரஜினி இடையே இந்த நட்புறவு நீடித்து வருகிறது. கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்திற்கு, இந்த ஆண்டும் தவறாமல் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தார் ராகேஷ் ரோஷன்...அவருடைய வாழ்த்துக்களால் மகிழ்ச்சியுற்ற ரஜினி, ராகேஷ் ரோஷனிற்கு தனது நன்றிகளை தெரிவித்தது மட்டுமின்றி, ஹ்ரித்திக் ரோஷனையும் வெகுவாக பாராட்டினார்.
"காபில்' படத்தின் தமிழ் - ஹிந்தி மற்றும் தெலுங்கு டிரைலர்களை பார்த்தேன்....அவை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஹ்ரித்திக் இதில் மிக பிரம்மாண்டமாக தோன்றி இருக்கிறார்... படத்திற்காக நான் மிகுந்த ஆவலோடு காத்து கொண்டிருக்கிறேன் என்று ஹ்ரிதிக்கிடம் தெரியப்படுத்துங்கள்..." இவ்வாறாக கூறினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
காபில் திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பிற்கு 'பலம்' என்று தலைப்பிட பட்டிருக்கிறது. 'காபில் ஹூன்', 'ஹசீனா கா தீவான' பாடல்களை பார்த்த ரஜினிகாந்த், அதன் இசையமைப்பாளர் ராஜேஷ் ரோஷனையும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்தின் இந்த பாராட்டு, ராகேஷ் ரோஷனையும், ஹ்ரிதிக்கையும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. ஹ்ரித்திக் - யாமி கௌதம் நடிப்பில் தற்போது 'காபில்' படத்தின் இரண்டாம் டிரைலர் வெளியாகி இருக்கிறது....பார்வையற்ற இரண்டு கதாபாத்திரங்களான ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் யாமி கௌதம் இடையே இருக்கும் ஆழமான காதலையும், அதிரடியான கதை களத்தையும் உள்ளடக்கி இருப்பது தான் 'காபில்' .
சஞ்சய் குப்தா இயக்கி இருக்கும் 'காபில்' திரைப்படம் வருகின்ற 2017 - ஜனவரி 25 ஆம் தேதி வெளியாக இருக்கின்றது.
Rajinikanth and Hrithik Roshan