‘பெப்சி’ அமைப்புக்கு மாற்றாக சில ஆண்டுகளுக்கு முன்பு மன்சூர் அலிகான் தொடங்கிய ‘டாப்சி’ அமைப்பின் தலைவர் பதவியை உதறினார் மன்சூர்.
தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் ‘பெப்சி’ என்ற கூட்டமைப்பின் மூலம் செயல்பட்டு வந்தனர். பெப்சி அமைப்பினரின் ஆதரவு இல்லாமல் எந்த பெரிய நடிகரின் படமும் படபிடிப்புகளை நடத்த முடியாத சூழல் நிலவி வந்தது. இதன் மூலம் சிறு பட தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர். இந்த சூழலில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர், தயாரிப்பாளர் மன்சூர் அலிகான் ‘அதிரடி’ என்ற படத்தை தொடங்கினார். அப்போது ‘பெப்சி’ தொழிலாளர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மன்சூர் அலிகான் தலைமையில் ‘டாப்சி’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. சுமார் 700க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதில் உறுப்பினகளாக இருக்கிறார்கள். இந்த நிலையில், சென்னையில் நடிகர் மன்சூர் அலிகான் திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:
2 ஆண்டுகளுக்கு முன்பு "அதிரடி" படத்தின் போது ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக டாப்சி என்ற அமைப்பை தொடங்கி தலைவராக இருந்து வந்தேன். பிரதமர் மோடியின் பணமதிப்பு மாற்ற கொள்கையின் காரணமாக படப்பிடிப்புகள் பெரும்பாலும் குறைந்து விட்டது, ஷூட்டிங் நடக்காததால் தொழிலாளர்கள் வேலையிழந்திருக்கிறார்கள். இந்த டாப்சி அமைப்பில் 700 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு வேலை தரவேண்டியது அவசியமாகிறது. அதோடு, பெப்சி அமைப்போடு இணக்கமான சூழலில் பல படங்களில் பணியாற்ற வேண்டியிருப்பதாலும், வரப்போகும் தயாரிப்பாளர் சங்க தேர்தல், நடிகர் சங்கம் உட்பட பல்வேறு திரைத்துறை அமைப்புகளில் நடைபெற உள்ள தேர்தல்களில் போட்டியிட உள்ளதாலும் டாப்சி என்ற அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்திருக்கிறேன். முறைப்படி தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்தாலும் சாதாரண உறுப்பினராக அதில் தொடர்ந்து நான் நீடிப்பேன். பல்வேறு அதிரடிகள் தொடரவேண்டியிருப்பதால் இந்த முடிவு எடுத்திருக்கிறேன். நான் வெளியில் இருந்தால்தான் பலருக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்ய முடியும். இவ்வாறு நடிகர் மன்சூர் அலிகான் கூறியிருக்கிறார்.
Mansoor Ali Khan Speech in Press Meet Stills
Mansoor Ali Khan Speech in Press Meet...
Mansoor Ali Khan Speech in Press Meet...
Mansoor Ali Khan Speech in Press Meet...