இந்த வார துவக்கத்திலிருந்தே திரையரங்குகள் முடங்கி உள்ளன. கடந்த மூன்று தினங்களாக சுமார் ஆயிரத்தி நூறு திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்களென திரையுலக கலைஞர்கள் அனைவருமே ஸ்தம்பித்து நிற்கிறார்கள். சில படங்களின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 30% மாநில கேளிக்கை வரிவிதிப்பு ரத்து செய்யும் வரை திரையரங்குகள் மூடப்பட்டு தான் இருக்கும் என் அபிராமி ராமநாதன் தன் முடிவில் உறுதியாக இருக்கிறார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நேற்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவர்களின் கோரிக்கையை முன் வைத்தனர். தமிழக அரசு கேளிக்கை வரியை இவ்வார இறுதியிலேயே திரும்ப பெறப் போவதாக தகவல்கள் வெளியாகிறது. அரசு கேளிக்கை வரியை திரும்ப பெற்றுக்கொண்டால் திரையரங்க உரிமையாளர்களும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு வழக்கம் போல திரையரங்கங்கள் இயங்க வாய்ப்பு உள்ளது.