BOGAN release on 2nd February is on the top of the most discussed topics of this week and Music Director Imman adds lot of importance to Bogan as the music chart of the film was constantly on top.D Imman is a perfectionist in blending medleys with Indian folk rhythms and also in new age Gaana. Bogan, Produced by Prabhudeva and Dr K Ganesh under the banner ‘Prabhudeva Studios’, that has Jayam Ravi - Arvind Swamy - Hansika in the lead roles is directed by ‘Romeo Juliet’ fame Lakshman. A heartwarming melody and a new age Gaana for a film is becoming the signature of composer D Imman, and the same has been imprinted in BOGAN by ‘Damaalu Dumeelu’ and ‘Senthoora’.
“Rather saying work, I can say that it’s a reunion. But this time our team has got one more star, Arvind Swami. Just like ‘Dandanakka’ song in Rome Juliet, we have planned to compose a unique new age Gaana in BOGAN too, and that’s how the tribute song to Heroes of Tamil Film Industry ‘Damaalu Dumeelu’ has born. As usual Anirudh has nailed it by his rock star voice. I feel really happy to receive such positive acclaims from the music lovers. Since BOGAN is a dual hero subject, the BGM part needed more concentration, and I am confident that it has been carried out well” says Music Director D Imaan, who is eagerly waiting for the release of BOGAN on February 2nd.
"போகன்' படத்தின் பிண்ணனி இசைக்கு நான் அதிக கவனம் செலுத்தி இருக்கிறேன்" என்று கூறுகிறார் இசையமைப்பாளர் டி இமான்
ஜெயம் ரவி - அரவிந்த் சுவாமி - ஹன்சிகா மோத்வானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'போகன்' திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. இந்த படத்திற்கு டி இமானின் இசை மிக பெரிய பலம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். 'போகன்' படத்திற்காக இவர் இசையமைத்த பாடல்கள் யாவும் இசை பிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருப்பதே அதற்கு சிறந்த உதாரணம். 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' சார்பில் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே கணேஷ் இணைந்து தயாரித்து இருக்கும் போகன் திரைப்படத்தை 'ரோமியோ ஜூலியட்' புகழ் லக்ஷ்மன் இயக்கி இருக்கிறார்.
"இந்த படத்தில் பணியாற்றி இருக்கிறேன் என்று சொல்வதை விட, எங்கள் கூட்டணியோடு மீண்டும் இணைந்து இருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். எங்களின் கூட்டணியில் தற்போது அரவிந்த் சுவாமியும் இணைந்து இருப்பது மேலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ரோமியோ ஜூலியட் படத்தில் இடம்பெற்ற புதுவிதமான கானா பாடலான 'டண்டணக்கா' பாடலை போல இந்த படத்திலும் இருக்க வேண்டும் என்று எண்ணி, தமிழ் திரையுலகின் நடிகர்களுக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக 'டமாலு டுமீலு' பாடலை உருவாக்கினோம். இந்த பாடலுக்கு தன்னுடைய குரலால் மேலும் சிறப்பு சேர்த்து இருக்கிறார் அனிரூத். 'போகன்' படம் இரண்டு கதாநாயகர்களை உள்ளடக்கி இருப்பதால், பிண்ணனி இசையில் நான் அதிக கவனம் செலுத்தி இருக்கின்றேன். வருகின்ற பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வெளியாகும் போகன் திரைப்படம் அதனை உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது." என்று உற்சாகமாக கூறுகிறார் இசையமைப்பாளர் டி இமான்.
Music Director D Imman