சென்னை போன்ற பெருநகரத்தில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களும் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் தங்களின் பணியின் நிமித்தமாக வாழ்ந்து வருகின்றனர். பெருகி வரும் இந்த மனித நெருக்கடியின் நிமித்தமாக, பாரம்பரியமிக்க பாலியல் தொழிலும் மிக மும்முரமாக செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக "சிவப்பு எனக்கு பிடிக்கும்" திரைப்படம் வரும் 20ம் தேதி வெளிவருகின்றது.
அனைவரின் எதிர்ப்பார்ப்புக்கும் உள்ளான இந்த திரைப்படத்தில் எழுத்தாளர் யுரேகாவிடம் மகிமா எனும் பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் சான்ட்ரா எமி தன்னிடம் வந்து சென்ற ஐந்து வாடிக்கையாளர்களை பற்றி எழுத்தாளர் யுரேகாவிடம் பகிர்ந்துக் கொள்கிறார். வந்து செல்லும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களும், வெறும் உடல் தேவைக்காக மட்டும் வரவில்லை என்பதையும், அவர்களுக்கு ஒரு மனநல மருத்துவராக செயல்பட்டதை கூறுகிறார்.
கதைக்களம் இதுமட்டுமல்ல, பாலியல் வன்முறைகளுக்கு எதிரான, நெஞ்சை உருகவைக்கும் இறுதிகாட்சியும் , சென்னைக்கு சிவப்பு விளக்கு பகுதி வேண்டுமென்ற சர்ச்சையான கோரிக்கையையும் முன் வைக்கிறது "சிவப்பு எனக்கு பிடிக்கும்".
துளிக்கூட ஆபாசம் இல்லாமல் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், தணிக்கை குழுவினராலும், பத்திரிக்கையாளர்களாலும், சமூக வலைதளங்களிலும் மிகவும் பாராட்டப்பட்ட ஒரு திரைப்படம்.
பல விருதுபெற்ற திரைப்படங்களை வெளியிட்ட ஜே.சதிஷ் குமாரின் ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் ஜனவரி 20ம் தேதி இத்திரைப்படத்தை வெளியிடுகின்றது.
Sandra Amy in Sivappu Enakku Pidikkum Movie
Sandra Amy in Sivappu Enakku Pidikkum...