‘அட்டகத்தி’ படமூலம் சிறந்த இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித் இரண்டாவது படமாக ‘மெட்ராஸ்’ படத்தில் தன்னை மீண்டும் சிறந்த இயக்குநர் என்று நிரூபித்துக்கொண்டார். மூன்றாவது படமாக ரஜினி நடித்த ‘கபாலி’ – மூலம் உலகம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டார். இதனால் ரஜினியின் அடுத்தபடத்தையும் இவரே டைரக்ட் செய்கிறார். இவர் இப்பொழுது தயாரிப்பு நிறுவனத்தை நிறுவியுள்ளார். ‘நீலம்’ புரொடக்சன் என்று பெயரிட்ட இப்படநிறுவனம் மூலம் ‘பரியேறும் பெருமாள்’ (PARIYERUM PERUMAL) என்ற படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் மாரி செல்வராஜ் (MARI SELVARAJ ). இவர் இயக்குநர் ராமிடம் ‘கற்றதுதமிழ்’, ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’ ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணிபுரிதுள்ளார்.
திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை எழுதப்பட்டிருக்கிறது. லவ், ஆக்ஷன், என எல்லா தரப்பு ரசிகர்களை கவரும் விதமாகவும் கதை அமைந்துள்ளது.
இதில் நெல்லை மாவட்ட இளைஞராக கதிர் நாயகனாக நடிக்கிறார். ‘கிருமி’ படம் மூலம் சிறந்த நடிகர் என்று பெயரெடுத்த இவர் இப்படத்திற்காக சிறந்த பயிற்சி எடுத்துவருகிறார். இவரது ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
ஜனவரி மாத இறுதியில் இதன் படபிடிப்பு ஆரம்பமாகிறது. இதற்காக டைரக்சன் குழு இப்பொழுதே நெல்லையில் தங்கியுள்ளார்கள். படப்பிடிப்பு முழுவதும் நெல்லையில் நடைபெறுவதால் அந்த மாவட்ட மக்களை நடிக்க வைப்பதிற்கான தேர்வு இப்பொழுது நடைபெற்றுவருகிறது.
Kabali director P.Ranjith entered industry through critically acclaimed Attakathi and he has established himself as a versatile director through Madras. He got his worldwide fame through Superstar Rajinikanth's Kabali and thus he got Superstar Rajini Kanth 's next film. Now he started his production house Neelam productions and is producing the film "Pariyerum Perumal" and he introduces director Mari Selvaraj in this film. Mari Selvaraj is the assistant of Ram in Katradhu Tamizh, Thangameengal and Taramani. This film is based on a youngster's life in Tirunelveli and has all elements like love and action. Kathir who got his fame through Kirumi is playing the lead role. Anandhi plays the female lead and Santosh Narayanan scores the music. Art direction is going to be did by Ramu and Sridhar is the DOP of the film. The shooting is going to start on January end and the direction team is staying in Nellai from now to start the proceedings in January end. As the film shoot completely happens in Nellai, the people of the town are said to be casted in the film.
Director Pa. Ranjit