Amma creations is one of the legendary banners that has penetrated deep into the system of Tamil films for years. Starting with Deiva vaakku to current production, the ready to release "Gemini Ganesanum Surulirajanum" Amma creations has produced 19 films, and now they are joining hands with Venkat Prabhu for their 20th film.
"20th film is definitely a land mark film. Given the challenges faced by a producer in the recent days film making has become very tough. The massive success of chennai 28, second innings is a breather to Tamil cinema. I had earlier worked with Venkat Prabhu for "Saroja" which went on to be a big hit.
Our association again will bring an other commercially successful venture and we shall leave no stone unturned to make the film a massive hit. The selection if the heroine, other cast and crew is on" says T Siva of Amma Creations with his brand image of being confident.
அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படம், பூஜையுடன் தொடங்கியது
'தெய்வ வாக்கு' முதல் அடுத்து வெளி வர இருக்கும் 'ஜெமினி கணேசனும், சுருளி ராஜனும்' வரை பத்தொன்பது திரைப்படங்களை தயாரித்து உள்ள அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா, தற்போது தனது இருபதாவது படத்தை வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தயாரிக்க உள்ளார்.
"எங்களுடைய இருபதாவது படம் நிச்சயமாக அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பிரம்மாண்ட திரைப்படமாக இருக்கும்...தற்போதைய சூழ்நிலையில் ஒரு திரைப்படத்தை தயாரிப்பது என்பது எல்லா தயாரிப்பாளர்களுக்கும் ஒரு சவாலான காரியம் தான். ஆனால் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று இருக்கும் சென்னை 28 II இரண்டாம் பாகம் எங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருப்பது மட்டுமின்றி எங்கள் மனதில் புது நம்பிக்கையையும் விதைத்து இருக்கின்றது. ஏற்கனவே நானும் - வெங்கட் பிரபுவும் இணைந்து பணியாற்றிய 'சரோஜா' திரைப்படம் அமோக வெற்றியை தழுவியது போல், இந்த படமும் வர்த்தக ரீதியாக ஒரு நிலையான வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.. இந்த படத்தின் நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது.." என்று கூறுகிறார் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா.
Amma Creations T Siva and Venkat Prabhu's next kick started with Pooja